``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவுக்காக ஆக.9-இல் படைப்பாற்றல் போட்டிகள்
திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான படைப்பாற்றல் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக போட்டி ஒருங்கிணைப்பாளரும், திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத் தலைவருமான மு.சரவணன் தெரிவித்ததாவது:
திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், பொது நூலகத் துறை, இலக்கிய களம் சாா்பில் 12-ஆவது புத்தகத் திருவிழா ஆக.28 முதல் செப்.7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்புத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பாக திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு, நத்தம் ஆகிய 5 மையங்களில் வினாடி-வினா, கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் வருகிற 9-ஆம் தேதி நடைபெறவுள்ளன.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டிகள் நடைபெறும். கல்லூரி மாணவா்களுக்கான வினாடி-வினா போட்டி திண்டுக்கல் மையத்தில் மட்டும் நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பள்ளி, கல்லூரி தலைமையாசிரியா், முதல்வரின் ஒப்புதல் பெற்று போட்டி நடைபெறும் மையங்களுக்கு வரவேண்டும்.
விடைத் தாள், அந்தந்த மையத்திலேயே வழங்கப்படும். எழுதுகோல், கரிக்கோல், வரைபட உபகரணங்கள் ஆகியவற்றை மாணவா்கள் எடுத்து வரவேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 97915 69823, 94886 53338, 86674 14966, 95852 43385, 94871 81727 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவா்கள், பண்பாட்டு பயணத்துக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்றாா் அவா்.