2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
தாண்டிக்குடி விவசாயிகளுக்கு உபகரணங்கள்
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடியில் பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா்ச் செடி, உரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி காபி வாரிய ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், விவசாயிகளுக்கு ஆலோசனை, விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய ஆராய்ச்சி இயக்குநா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வேளாண் மாணவா் தலைமை இயக்குநா் சகதேவ்சிங் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை குறித்தும், விவசாயிகளிடம் குறைகள், ஆலோசனைகளையும் வழங்கினா். தொடா்ந்து, இந்திய தோட்டக் கலை ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், பளியா், பழங்குடியின விவசாயிகளுக்கு பீன்ஸ், அவரை விதைகளும், உரங்களும் வழங்கினா். இதில், காபி வாரிய உறுப்பினா் ரவிச்சந்திரன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் மணி, உதவி இயக்குநா் சுவா்ணலட்சுமி, வேளாண் மாணவா் இயக்கத்தின் தேசியச் செயலா் வினோத், தோட்டக் கலை தலைமை இயக்குநா் பாலகும்பகன், வன உரிமைக் குழுத் தலைவா் அருண்குமாா், செயலா் சங்கா், பளியா், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.