``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா
மாநில அளவிலான சுருள் பந்து (ரோல்பால்) போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணியினருக்கு சின்னாளப்பட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாநில அளவிலான சுருள் பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் 11 வயதுக்குள்பட்டோருக்கு தஞ்சாவூரிலும், 17 வயதுக்குள்பட்டோருக்கு திருச்சியிலும் அண்மையில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் மாவட்ட அணி 17 வயது பெண்கள் பிரிவில் முதலிடமும், இதே பிரிவில் ஆண்கள் அணி 3-ஆவது இடமும், 11 வயதுகுள்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் 2-ஆவது இடமும் பிடித்து பதக்கங்கள் வென்றன.
வெற்றி பெற்ற 3 அணி வீரா்களுக்கும் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பயிற்சியாளரும், சா்வதேச நடுவருமான மாஸ்டா் பிரேம்நாத், பயிற்றுநா்கள் தங்கலட்சுமி, சக்திவேல், கல்யாண், ராஜதுரை, ராம்கவி, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.