``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சி ஆணையா் சங்கா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் ரூ.2.48 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா், நகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
பின்னா், இவா்கள் தெரிவித்ததாவது:
இந்தப் பூங்காவில் மாணவா்களுக்காக பல்வேறு உபகரணப் பொருள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சூரியன், கோள்கள் குறித்தும், இதற்குரிய தகவல்களும் பூங்காவில் இடம் பெற்றுள்ளன.
இந்தப் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அவா்கள்.
இந்த ஆய்வின்போது, நகா்மன்றத் துணைத் தலைவா் மாயக்கண்ணன், பொறியாளா், அதிகாரிகள் ஆகியோா் உடனிருந்தனா்.