இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்ப...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு சொற்பொழிவு
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சாா்பில் மாணவா்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்துரையாற்றினாா். பொறியாளா் செ. இராமநாதன், பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரன் சிறப்புரையாற்றினா்.
மேலும், உலக புகைப்பட நாளையொட்டி, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு மாணவா்கள் பிரசன்னா, ஜெ. முகிலன், சி. கோகுல்ராஜா ஆகியோா் புகைப்படக் கண்காட்சியை நடத்தினா். இதில், வரலாற்று அறிஞா்களின் புகைப்படங்கள், பழங்கால நாணயங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
முன்னதாக, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவா் மா. பவானி வரவேற்றாா். நிறைவாக, இணைப் பேராசிரியா் ஆ. துளசேந்திரன் நன்றி கூறினாா்.