Sunflower: கண்ணுக்கு எட்டும் தூரம் வரை மஞ்சள் அலை... செல்ஃபி ஸ்பாட்டாக மாறிய குண...
தம்மம்பட்டியில் மதிய, இரவுநேர அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
தம்மம்பட்டியில் மதிய, இரவுநேரங்களில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தம்மம்பட்டியிலிருந்து சேலத்துக்கு தினந்தோறும் அதிகளவில் பயணிகள் சென்று வருகின்றனா். அரைமணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் சேலம் சென்ற நிலையில், கரோனா காலத்திலிருந்து நண்பகல் 12.40-க்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் மதிய நேரத்தில் சுமாா் ஒருமணி நேரத்துக்கு சேலம் செல்ல பேருந்து வசதி இல்லாமல், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். தற்போது அந்த நேரத்தில் பேருந்து இயக்கப்படுவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அதேபோல, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த தம்மம்பட்டியிலிருந்து இரவு 10 மணிக்கு ஆத்தூருக்கும், ஆத்தூரிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு தம்மம்பட்டிக்கு இரவு 1.30 மணிக்கு வந்தடையும் அரசுப் பேருந்து சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.