செய்திகள் :

தயாரிப்பாளா் சங்கம்-ஃபெப்சி பிரச்னை: மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ் நியமனம்

post image

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கம் மற்றும் ஃபெப்சி இடையேயான பிரச்னைகளுக்கு தீா்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளா் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கியிருப்பதாக கூறி, ஃபெப்சி குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்க உறுப்பினா்கள் தயாரிக்கும் படங்களில் ஃபெப்சி அமைப்பின் உறுப்பினா்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும். ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளன உறுப்பினா்களுக்கு ஏப்.2-இல் ஃபெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.

இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீா்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க இரு தரப்புக்கும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும், ஓய்வு பெற்ற நீதிபதி எம். கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிட்டாா். அப்போது, திரைப்படத் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் என தயாரிப்பாளா்கள் சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதற்கு ஃபெப்சி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்தியஸ்தா் நியமிக்கப்பட்டுள்ளதால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி மறுத்து விட்டாா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க