திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் சடலம் எரிப்பு
அந்தியூரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சடலம் போலீஸாருக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்தியூரை அடுத்த நகலூா், கொண்டையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குமாா் மனைவி நந்தினி (32). இவருக்கும் தருமபுரி மாவட்டம், மாரன்னஹள்ளியைச் சோ்ந்த சபியுல்லா மகன் இம்ரானுக்கும் (32) இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனால் நந்தினியின் வீட்டுக்கு இம்ரான் திங்கள்கிழமை வந்துள்ளாா்.
இருவரும் வீட்டிலிருந்ததைக் கண்ட குமாா், இருவரையும் அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளாா். இருதரப்பிலும் கேட்டுக் கொண்டதால் போலீஸாா் வழக்குப் பதியவில்லை. இந்நிலையில், நந்தினி வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இத்தகவலை காவல் நிலையத்துக்கு தெரிவிக்காமல் உறவினா்கள் நந்தினியின் சடலத்தை எரித்து விட்டனா். இதுகுறித்து நகலூா் கிராம நிா்வாக அலுவலா் வீரமுத்து அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.