செய்திகள் :

தவெக வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கம் - வேலூரில் புஸ்ஸி ஆனந்தை களமிறக்கிய விஜய்!

post image

மிழக வெற்றிக் கழகத்தின் மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் கடந்த மாதம் கோவையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வடக்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களை ஒருங்கேயிணைத்து 2-ம் கட்ட பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கும் த.வெ.க தலைவர் விஜய், அதற்கான இடம் தேர்வில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை களமிறக்கிவிட்டிருக்கிறார். முன்னதாக இன்று (26-5-2025) காலை, மேல்மருவத்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புஸ்ஸி ஆனந்த் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு வந்தார்.

புஸ்ஸி ஆனந்த்

ஆரணியில் கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பிறகு வேலூர் அருகிலுள்ள பள்ளிகொண்டா கந்தனேரிக்கு மாலை 6.30 மணியளவில் வந்தார். கந்தனேரியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டிய விசாலமான இடத்தை கருந்தரங்கிற்காக தேர்வு செய்யலாமா? என்று பார்வையிட்டு வேலூர் மாவட்ட த.வெ.க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். பிறகு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றார் புஸ்ஸி ஆனந்த். அப்போது, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மேற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

United Nations: நிதி நெருக்கடி... `கிட்டத்தட்ட 7,000 பேரை பணிநீக்கம் செய்கிறதா ஐக்கிய நாடுகள் சபை?'

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம். ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில்... மேலும் பார்க்க

பாமக: "என் அம்மா மேல் துரும்பைக் கூடப் படவிடமாட்டேன்; ஆனால் இப்போது..." - அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.இத்தகைய சூழலில், சோழிங்... மேலும் பார்க்க

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க