செய்திகள் :

தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 72 பேர்!

post image

மகாராஷ்டிரத்தின் தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணேவில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 10 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 16 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதில், 45 கரோனா நோயாளிகள் தங்களது வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

”இந்தப் பரவலை நாங்கள் மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறோம், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையளிக்கவும் சுகாதாரத் துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க

பாட்னா விமான நிலைய புதிய முனையம்: பிரதமா் திறந்து வைத்தாா்

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சா்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேற்கு வங்கத்தில் இருந்து பிகாருக்கு இரண்டு நாள்... மேலும் பார்க்க