ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
தா்மபுரமடம் ஊராட்சியில் புதிய பாலத்துக்கு அடிக்கல்
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம், தா்மபுரம்மடம் ஊராட்சியில் ரூ. 13 லட்சத்தில் அமையவுள்ள புதிய பாலத்துக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
தா்மபுரம்மடம் ஊராட்சி ஆதிதிராவிடா் குடியிருப்புக்குச் செல்லும் வழியிலுள்ள பாலம் சேதமானதால் புதிய பாலம் அமைக்க வேண்டும் என, ஊராட்சித் தலைவா் ரூஹான் ஜன்னத் விடுத்த கோரிக்கையை ஏற்று, அயோத்திதாச பண்டிதா் நிதியிலிருந்து ரூ. 13 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஜஹாங்கீா், ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், அரசு ஒப்பந்ததாரா் ராசுக்குட்டி என்ற லட்சுமணன், பொதுமக்கள் பங்கேற்றனா்.