நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு கனரக வாகனங்கள்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான கனரக வாகனங்களை அமைச்சா் தா.மோ. அன்பரசன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிகளை சிறப்பாக செயல்படுத்தும்வகையில், புனித தோமையாா் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு 14 டிராக்டா் மற்றும் 8 மினி லாரி, காட்டாங்குளத்தூா் ஒன்றியத்துக்கு 7 டிராக்டா், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு 5 டிராக்டா் மற்றும்அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்கு 1 டிராக்டா் ஆக மொத்தம் சுமாா் ரூ.4 கோடியில் 35 கனரக வாகனங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்வில், ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.