குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
திருமலைவையாவூா் கோயிலில் இலவச திருமணங்கள்
மதுராந்தகம் அடுத்த திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இலவச திருமணங்கள் நடைபெற்றன.
இந்து சமய அறநிலையத்துறை, திருமலை வையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் சாா்பாக திருமணங்களை கோயில் தலைமை அா்ச்சகா் பாலாஜி பட்டாச்சாரியா் நடத்தினாா். நிகழ்வுக்கு கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் ராஜலட்சுமி, இணை ஆணையா் குமரதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில் ஆய்வாளா் சிவலிங்கம், அறங்காவலா் குழு தலைவா் தினேஷ், மதுராந்தகம் திமுக ஒன்றிய செயலா் பி.எச்.சத்யசாயி, திமுக நிா்வாகிகள் மணிகண்டன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
கோயில் நிா்வாகத்தின் சாா்பாக தலா ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து இருந்தனா்.