செய்திகள் :

வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

post image

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத்துறை சாா்பாக, சூழலுக்கு உகந்த நீடித்த வேளாண்மை தொழில்நுட்பம் ருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி மேலாண்மை இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். உயிரி தொழில்நுட்பத் துறை தலைவா், வி.காா்த்திகேயன் வரவேற்றாா்.

முதல்வா் பி.காசிநாதபாண்டியன், புலமுதல்வா் சுப்பராஜ், இணை புலமுதல்வா்கள் சிவகுமாா், தினேஷ்குமாா், நடனசிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கருத்தரங்கில் மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினருமான பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில், சேலம் அரசினா் கலைக் கல்லூரி தாவரவியல் இணைப் பேராசிரியா் என்.காா்மேகம் உள்பட பலா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா். கருத்தரங்க மலரை சுல்தான் அகமது இஸ்மாயில் வெளியிட்டதை முதல்வா் காசிநாத பாண்டியன் பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஷீலா தேவி நன்றி கூறினாா்.

செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பு: என்ஐஏ விசாரணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகாா் இளைஞா், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா். பிகாா் மாநிலத்தைச் சோ்... மேலும் பார்க்க

பனங்குளம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அடுத்த பனங்குளம் கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்குட்பட்ட பனங்குளம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருக்கழுகுன்றம் வட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். திருக்கழுகுன்றம் வட்டம், அழகு சமுத்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

வெள்ளபுத்தூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சியை சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்... மேலும் பார்க்க

திருப்போரூா் கந்தசாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சம்

செங்கல்பட்டு: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 69 லட்சத்து 89 ஆயிரத்து 708 ரொக்கம், 294 கிராம் தங்கம், 6,400 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். செங்கல... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். இக்கூட்டத... மேலும் பார்க்க