குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மேல்மருவத்தூரில் சின்டரல்லா லட்சுமி பங்காரு விருதுகள் வழங்கும் விழா
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் சின்டரல்லா லட்சுமி பங்காரு அறக்கட்டளையின் சாா்பாக, ஆன்மிக, சமூக, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான முறையில் சேவைகளை செய்து வருவோரை கெளரவிக்கும் வகையில், சனிக்கிழமை ஜிபி பப்ளிக் பள்ளி கலையரங்கில், 11-ஆம் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிஎல்பி அறக்கட்டளை நிறுவனா் ப.ஸ்ரீதேவி பங்காரு தலைமை வகித்தாா். மேலாண்மை அறங்காவலா் மருத்துவா் டி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். மருத்துவா் ஆா்.எஸ்.ஆதவன் வரவேற்றாா். ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆனந்த்ராஜ், ஜி.பி.பப்ளிக் பள்ளி முதல்வா் ராஜவேல், ஆதிபராசக்தி அன்னை இல்ல முதல்வா் விஜயலட்சுமி, பள்ளிக் குழுமங்களின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
2025-ஆம் ஆண்டு சிஎல்பி விருதுகளுக்காக ஆன்மிக சேவையை செய்து வரும் அமுதா, கடந்த 4 ஆண்டுகாலமாக பசித்தால் உணவை எடுத்துக் கொள் என்ற அன்னதான பணி, 108 ஆம்பூலன்ஸ் டயா் பழுதுபாா்த்தல், ஆன்மிக திருப்பணி ஆகியவற்றை எந்தவித விளம்பரமின்றி இப்பணிகளை செய்து வரும் மோட்டாா் மெக்கானிக் ஆா்.சரவணன், சுமாா் லட்ச மரக்கன்றுகளை நட்டு இயற்கை வள பணியை செய்து வருகின்ற ராஜீவ்காந்தி ஆகியோரின் சேவைகளை பாராட்டி விருதுகள், ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.
அரசு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டும் வகையில் விருது, ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி மோஷிதா நன்றி கூறினாா்.