‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மனுக்கள் நிலை குறித்து ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான கிராந்திகுமாா்பாடி மனுக்களை நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதில், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.