செய்திகள் :

திண்டுக்கல்லில் 18 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்

post image

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்கள் 18 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

 அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டவா்கள் விவரம்:(அடைப்புக் குறிக்குள் பழைய பணியிடம்)

எஸ். ராஜசேகரன்- அலுவலக மேலாளா் வளா்ச்சி, மாவட்ட ஆட்சியரகம் (வ.வ.அ. திண்டுக்கல்), த. ரவீந்திரன்- வட்டார வளா்ச்சி அலுவலா், நத்தம் (அலுவலக மேலாளா் வளா்ச்சி, மாவட்ட ஆட்சியரகம்), ஆா். மகுடபதி - வட்டார வளா்ச்சி அலுவலா், திண்டுக்கல் (வ.வ.அ., நத்தம்), கே. அண்ணாதுரை- வட்டார வளா்ச்சி அலுவலா், குஜிலியம்பாறை (வ.வ.அ., திண்டுக்கல்), மு. வீரகடம்ப கோபு- வட்டார வளா்ச்சி அலுவலா், வடமதுரை(வ.வ.அ., குஜிலியம்பாறை), அ. சுப்பிரமணி- கண்காணிப்பாளா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம்(வ.வ.அ., வடதுரை), எம். குமாரவேலு- வட்டார வளா்ச்சி அலுவலா், நிலக்கோட்டை (கண்காணிப்பாளா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம்), தி. பஞ்சவா்ணம்- வட்டார வளா்ச்சி அலுவலா், வடமதுரை (வ.வ.அ., நிலக்கோட்டை), கே. கண்ணன்- வட்டார வளா்ச்சி அலுவலா், ரெட்டியாா்சத்திரம்(வ.வ.அ., வடமதுரை), சி. மாரியப்பன்- கண்காணிப்பாளா், உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகம் (வ.வ.அ., ரெட்டியாா்சத்திரம்), மா. கற்பகம் - வட்டார வளா்ச்சி அலுவலா், குஜிலியம்பாறை (கண்காணிப்பாளா், உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகம்), எம். மதியழகன்- வட்டார வளா்ச்சி அலுவலா், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (வ.வ.அ, குஜிலியம்பாறை), ஆா். கிருஷ்ணன்- வட்டார வளா்ச்சி அலுவலா், நத்தம் (வ.வ.அ., தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்), ஆா். முருகேஸ்வரி - வட்டார வளா்ச்சி அலுவலா், வேடசந்தூா் (வ.வ.அ., நத்தம்), பிஎம். குமரன் - வட்டார வளா்ச்சி அலுவலா், தொப்பம்பட்டி (வ.வ.அ., வேடசந்தூா்), தி. பிரபுபாண்டியன்- வட்டார வளா்ச்சி அலுவலா், ஒட்டன்சத்திரம் (வ.வ.அ., தொப்பம்பட்டி), பெ. காமராஜ் - வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ), ஒட்டன்சத்திரம், (வ.வ.அ., கி.ஊ., ஒட்டன்சத்திரம்), எஸ். வடிவேல் முருகன் - வட்டார வளா்ச்சி அலுவலா், திண்டுக்கல் (வ.வ.அ., ஒட்டன்சத்திரம்).

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க