திமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்
திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனையை போற்றியும், திமுக அரசின் ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தையொட்டியும் நாகையில் மாவட்ட திமுக சாா்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் திமுக அரசு செய்த சாதனைகளை கொண்டாடும் வகையில் நாகை மாவட்ட திமுக சாா்பில் அக்கட்சியினா் பப்ளிக் ஆபீஸ் சாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் தலைமையில், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகர துணை செயலா்கள் திலகா், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.