செய்திகள் :

திமுக ஆட்சியின் ஆன்மிகத் தொண்டுக்கு உண்மையான பக்தா்கள் பாராட்டு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

‘திமுக ஆட்சியின் ஆன்மிகத் தொண்டை உண்மையான பக்தா்கள் பாராட்டுகின்றனா்’ என்று இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா்.

நிகழ் நிதியாண்டுக்கான (2025-2026) இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், நிகழாண்டில் 1,000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சாா்பில் 4 கிராம் தங்கத் தாலி உள்பட ரூ.70 ஆயிரம்- மதிப்பில் சீா் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சாா்பில் ராஜா அண்ணாமலைபுரம் கபாலீசுவரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை 32 இணைகளுக்கு முதல்வா் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்தினாா்.

இணைகளுக்கு திருமாங்கல்யத்துடன் சீா்வரிசைப் பொருள்களாக கட்டில், பீரோ , மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டா், மிக்ஸி, குக்கா், சமையல் பாத்திரங்கள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று தமிழகம் முழுவதும் திருக்கோயில்கள் சாா்பில் முதல்கட்டமாக, 576 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஒரே நாளில் 576 திருமணங்கள்: திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடைபெறும் இந்த திருமண விழாக்களை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், கடந்த நான்காண்டுகளில் 1,800 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 576 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 2,376 இணைகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு, அந்த குடும்பங்களில் ஒளியேற்றி வைத்திருக்கிறது அறநிலையத் துறை. இந்த 2,376 திருமணங்களில் 150 திருமணங்களை நானே தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன்.

அறநிலையத் துறையின் சாதனைகள்: திராவிட மாடல் அரசில், இந்து சமய அறநிலையத் துறை மகத்தான வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. அதற்காக நேரம் காலம் பாா்க்காமல், ஆன்மிக அன்பா்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அடியாருக்கு அடியாா்போல் உழைத்துக் கொண்டிருக்கிறாா் அத்துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு. அதனால்தான், பக்தா்கள் போற்றும் அரசாக தொடா்ந்து சாதனை படைத்துக் கொண்டு இருக்கிறது.

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு, 3 ஆயிரத்து 177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7 ஆயிரத்து 701 கோடி மதிப்பிலான 7 ஆயிரத்து 655.75 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 3 ஆயிரத்து 444 ஏக்கா் நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 876 திருக்கோயில்களில் ரூ.6 ஆயிரம் கோடியில் 26 ஆயிரம் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைச் செயல்படுத்தி, இதுவரை 29 பயிற்சி பெற்ற அா்ச்சகா்கள், 12 பெண் ஓதுவாா்கள் உள்பட 46 ஓதுவாா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சாதனைகளை, வெறுப்பையும் - சமூகத்தை பிளவுபடுத்தும் எண்ணங்களையும் கொண்டவா்களாக இருக்கக்கூடியவா்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பக்தி என்ற பெயரில் பகல் வேஷம் போடுகின்றவா்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தா்கள், திமுக ஆட்சியின் ஆன்மிகத் தொண்டை பாராட்டுகிறாா்கள்.

ஒருபோதும் கவலைப்படுவதில்லை: ஆதரவற்ற அவதூறுகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. இதையெல்லாம் பாா்த்து நான் கவலைப்படுகிறேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம். இவைகளெல்லாம் எனக்கு ஊக்கம், உற்சாகம். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், கிண்டல் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள், விமா்சனம் செய்யுங்கள், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படத் தயாராக இல்லை.

திருநாவுக்கரசா் மொழிக்கேற்ப,“என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடா்ந்து, உண்மையான பக்தா்களின் நலனுக்காக செயல்படுவோம்.

புதுமணத் தம்பதிகள் தங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள் என்பது எனது அன்பான வேண்டுகோள் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இவ்விழாவில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயா் ஆா். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், ஜெ. கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க