எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீ
திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்தது.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியே தமிழகம்-கா்நாடக மாநிலங்களுக்கு இடையேயான வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.
திம்பம் மலைப் பாதை 6-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்தது. சிறிது நேரத்தில் வாகனத்தின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் உடனடியாக வெளியேறி உயிா்த் தப்பினாா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனத்தின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.