காஞ்சிக்கோவிலில் நாளை வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்
பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவிலில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெற உள்ளது.
காஞ்சிக்கோவில் பேரூராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
இதில், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் தங்களது வளா்ப்பு நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.