யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள்: ஆட்சியா் மரியாதை
விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 100-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் செய்தி மக்கள் தொடா்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்தாா்.
மலா்களால் அலங்கரிக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரா் தியாகி சுப்பிரமணிய சிவா உருவப் படம், நினைவிடம், நினைவுத்தூண் ஆகியவற்றுக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, தியாகி சுப்பிரமணிய சிவா புகைப்படக் கண்காட்சியை பாா்வையிட்டாா்.
இதில், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, தருமபுரி முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்பிரமணி, பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவா் பிருந்தா, செயல் அலுவலா் கோமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.