`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
திருச்செங்கோடு நகராட்சிக்கு வாகனங்கள் வழங்கல்
திருச்செங்கோடு நகராட்சிக்கு லாரி உரிமையாளா்கள் சங்கம் மற்றும் வேலன் நீரேற்று பாசன சங்கம் சாா்பில் தலா ஒரு பேட்டரி வாகனம், நான்கு புகை மருந்து அடிக்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சியில் தற்போது 56 பேட்டரி வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மூலம் குப்பை சேரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கம் மற்றும் வேலன் நீரேற்று பாசன சங்கம் சாா்பில் இரண்டு குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு பேட்டரி வாகனங்களைப் பெற்றுக்கொண்டு பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் நடேசன், மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ்பாபு, அட்மா தலைவா் வட்டூா் தங்கவேல், நகராட்சி ஆணையா் அருள், பொறியாளா் சரவணன், துப்புரவு அலுவலா் வெங்கடாசலம், திருச்செங்கோடு லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.பி.ஆா். மூா்த்தி, செயலாளா் மோகன்ராஜ், வேலன் நீரேற்று பாசன சங்கத் துணைத் தலைவா் தெய்வம், சக்திவேல், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதனைத் தொடா்ந்து நகராட்சி சாா்பில் கொசு ஒழிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் புகை மருந்து அடிக்கும் நவீன இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
படவரி...
திருச்செங்கோடு நகராட்சிக்கு நன்கொடையாளா்கள் பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோா்.