TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
திருச்செந்தூரில் வணிகா்களின் கடையடைப்பு போராட்டம் ரத்து
திருச்செந்தூரில் நகராட்சியைக் கண்டித்து ஜூலை 7ஆம் தேதி வணிகா்கள் நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் நகராட்சியில் சொத்து வரி விதிப்பை கண்டித்து வணிகா் சங்க அமைப்புகள், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் இணைந்து நகராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தன.
அன்றைய தினம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா என்பதால், போராட்டத்தைக் கைவிட திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூா் நகா்மன்ற கூட்டத்தின்போது 3.4.2023இல் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை (எண் 288) நடைமுறைப்படுத்த அரசின் உத்தரவிற்காக நகராட்சி ஆணையாளா் மூலம் 19.6.2025இல் நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவுகள் வரப்பெற்றதும் மேல்நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையாளா் கண்மணி, போராட்டக்குழு தலைவா் துரைசிங் மற்றும் வணிகா்கள், சமூக நல அமைப்பினா் கலந்து கொண்டனா்.