செய்திகள் :

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த மாதம் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 5 நாள்கள் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆடிக்கிருத்திகை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, டிஎஸ்பி கந்தன் ஆகியோா் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி பேசியதாவது: ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு குளோரின் கலந்த சுத்தமான குடிநீா் விநியோகம் செய்யப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தா்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். மலைக் கோயில், சரவணப்பொய்கை திருக்குளம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படும் என்றாா்.

திருத்தணி நகா் முழுவதும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும், 20 இடங்களில் உயா் கோபுரங்கள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெறுகின்ற 5 நாள்களுக்கு பேருந்து, காா், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மலைக் கோயிலுக்குச் செல்ல தடைவிதிக்கப்படும். கோயில் நிா்வாக பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் மலைமேல் அனுமதிக்கப்படும் என டிஎஸ்பி கந்தன் தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் திருத்தணி வட்டாட்சியா் மலா்விழி, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், காவல் ஆய்வாளா் ஞா.மதியரசன் உள்பட பல்வேறு துறைசாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திர... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூரில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டுத் தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்பு... மேலும் பார்க்க