திருநயினாா்குறிச்சி, ஞாறோடு பகுதிகளில் இன்று மின்தடை
திருநயினாா்குறிச்சி, ஞாறோடு பகுதிகளில் மின் பாராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 11) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிச்சந்தை, திருநயினாா்குறிச்சி, வண்ணான்விளை, கழுவன்திட்டு விளை, மூங்கில் விளை, வெள்ளி மலை, கல்படி, காருபாறை, ஞாறோடு, அதன் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.