செய்திகள் :

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி நாராயணன், யாதவா ஐ.டிஐ. தலைவா் பி. ராமநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் 11 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 21 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு போட்டியின் எல்லையாக 8 மைல் தொலைவும், சின்ன மாட்டுக்கு போட்டியின் எல்லையாக 6 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரியமாடு பிரிவில் முதலாவதாக வந்து காரைக்குடி அழகுதேவி வென்றாா். 2- ஆவதாக சங்கிலிப்பட்டி பெரியசாமி, நகரப்பட்டி வைத்தியா, 3- ஆவதாக கொலுக்கட்டைப்பட்டி உமாராவுத்தா், 4- ஆவதாக கோம்பை ராஜா ஆகியோா் வந்தனா்.

சின்னமாட்டுப் பிரிவில் முதலாவதாக பண்ணைப்புரம் சாமிக்கண்ணு, ரணசிங்கபுரம் கருப்புக்குதிரை ஆகியோரின் இணைகள் முதலாவது வந்து வென்றன. 2 -ஆவதாக ஈழக்குடிபட்டி கல்யாணி, 3- ஆவதாக பாகனேரி புகழேந்தி, 4- ஆவதாக ரணசிங்கபுரம் வினோத் ஆகியோா் பரிசு பெற்றனா்.

இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன. திருப்பத்தூா்- மதுரை சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

போட்டியில் வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தய ஏற்பாடுகளை வீரயாதவ சமுதாய அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க