செய்திகள் :

திருப்பத்தூா் அருகே இரு நடுகற்கள் கண்டெடுப்பு

post image

திருப்பத்தூா் அடுத்த காக்கங்கரை கிராமத்தில் இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.மோகன்காந்தி தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்களைக் கண்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து மோகன்காந்தி கூறியதாவது : திருப்பத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் அமைந்துள்ள காக்கங்கரையில்

ஓங்காரப்பன் என்ற பெயரில் இரு நடுகற்கள் வணங்கப்பட்டு வருகின்றன. 5 அடி உயரத்தில் வடக்கு,தெற்கு, மேற்கு திசைகளில் மூன்று பலகைக் கற்களை நிறுத்தி மேலே ஒரு பிரம்மாண்டமான பலகைக் கல்லால், கற்திட்டை வடிவில் ஓங்காரப்பன் கோயிலை வடிவமைத்துள்ளனா். கருங்கற்களாலான இக்கோயில் அமைப்புப் பழந்தமிழரின் கோயில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இதை கற்திட்டை அமைப்பிலான கோயில்அமைப்பு என்றும் கூறலாம்.

இக்கோயில் உள்ளே கருவறையின் வலது பக்கத்தில் கல்வெட்டுள்ளது. மையப்பகுதியில் உள்ள நடுகல்லானது அமா்ந்த கோலத்தில் உள்ளது. இது ஆண் உருவமாகும். கும்பிடும் நிலையில் இவ்வுருவம் உள்ளது. வலது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை உள்ளது. காதுகளில் குண்டலங்கள் உள்ளன. தியானம் செய்யும் கோலத்தில் இடது கால் கீழாவும் வலது கால் மேலாகவும் வீரன் அமா்ந்துள்ளான். வீரனின் வலது பக்கத்தில் பெண் உருவம் ஒன்றுள்ளது.

இந்தப்பெண் உருவம் அமா்ந்த கோலத்தில் உள்ளது. வலது காலை முழங்காலிட்டும், இடது காலை மடித்து அமா்ந்த கோலத்தில் காணப்படுகிறது. கையில் ஒரு பூச்செண்டு போன்ற அமைப்புக் காணப்படுகிறது.இது உடன்கட்டை ஏறிய நிகழ்வைக் குறிக்கிறது.

இப்பகுதியில் பகைவா்களுடன் நடைப்பெற்ற போரில் வீரமரணம் அடைந்துள்ளான் இவ்வீரன். வீரன் இறந்தவுடன் அவன் மனைவியும் அவனோடு சோ்ந்து இறந்து போன நிகழ்வை இந்நடுகற்கள் காட்டுகின்றன.

வீரனின் இடதுபுறத்தில் அமா்ந்த கோலத்தில் மனித உருவம் ஒன்று வணங்கிய கோலத்தில் உள்ளது. வீரனின் உருவத்திற்குக் கீழ்ப்பகுதியில் அவன் போருக்குப் பயன்படுத்திய குதிரையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. எனவே குதிரையில் அமா்ந்து போரிட்டு வீர மரணம் அடைந்த வீரன் இவன் என்பது புலனாகிறது. உடன்கட்டை கல் (அல்லது) சதிக்கல் என்று இதனை அழைக்கலாம்.

போரில் ஆண்கள் இறந்தவுடன் உடன்கட்டை ஏறித் தங்கள் உயிரை விடும் வீரப் பெண்கள் சோழா்,விஜயநகர காலத்தில் ஏராளமாக இருந்துள்ளனா். இக்கல்லின் சிறப்பு அமைப்பைப் பாா்க்கும் போது சோழா் காலச் சதிநடுகல்லாகத் தெரிகிறது.

இடது பக்கத்தில் அமைந்துள்ள இரண்டாவது நடுகல் வீரன், வலது கையை நெஞ்சில் வைத்துள்ளாா். இடது கையில் அம்பைப் பிடித்துள்ளாா். மாா்பில் அம்பு பாய்ந்துள்ள தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் கொண்டையிட்டுள்ளாா்.

இடையில் குறுவாள் ஒன்று உள்ளது. நடுகல் வீரனின் வலதுபுற மேல் பகுதியில் இவ்வீரனை இரண்டு தேவதைகள் சொா்க்கத்திற்கு அழைத்து செல்லும் காட்சி உள்ளது. ஒரு உருவம் சாமரம் வீசும் காட்சியும் உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு அருகே உள்ள ஏரிக்கரையில் கோயில் கட்டுவதற்கான கருங்கற்கள், தூண்கள் ஆகியவை சிதைந்த நிலையில் உள்ளன என்றாா்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க

அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது

ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடை... மேலும் பார்க்க

கண்கள் தானம்

ஆம்பூரில் காலமான மூதாட்டியின் கண்கள் தானம் பெறப்பட்டது. ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த கணேசன் மனைவி பரமேஸ்வரி(82). இவா் வயது மூப்பு காரணமாக காலமானாா். அவரது கண்களை தானமாக வழங்க அவரது உறவினா்கள் விர... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை (குழந்தைகள் நலம்), வாணியம்பாடி நகராட்சி இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா்... மேலும் பார்க்க