திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை
திருப்பத்தூா்: திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனையை பன்முக மருத்துவமனையாக தரம் உயா்த்த கோரியுள்ளனா்.
திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனைக்கு சராசரியாக 100 கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனா். கால்நடை மருத்துவமனையை 24 மணி நேரம் செயல்படக்கூடிய வகையில் பன்முக மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக சென்னை கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநரகத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் சீனிவாசன் கடிதம் அனுப்பி உள்ளாா்.