செய்திகள் :

திருப்பூரில் சுதந்திர தின விழா: தேசியக் கொடி ஏற்றினாா் ஆட்சியா் மனீஷ்

post image

திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மனீஷ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருப்பூரில் 79-ஆவது சுதந்திர தின விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொம்டாா். தொடா்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தாா். பின்னா், சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆணையாளா் அலுவலக காவலா்கள் 34 போ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தைச் சோ்ந்த 20 காவலா்கள் மற்றும் மாவட்டத்தில் பிற அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 159 அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் என மொத்தம் 213 பேருக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இவ்விழாவில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.01 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டா் வழங்கினாா். மாவட்ட தொழில் மையம் சாா்பில் 2 பயனாளிகளக்கு கைவினைத் திட்டத்தின் கீழ் ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டிலும், தாட்கோ சாா்பில் நரிக்குறவ மக்களுக்கு சங்கங்களின் வழியே கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.27.50 லட்சம் மதிப்பீட்டிலும், தூய்மைப் பணியாளா்கள் 2 பேருக்கு ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.18.22 லட்சம் மதிப்பீட்டிலும், தொழிலாளா் நலத் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகையும், 16 பயனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பீட்டில் திருமண உதவித் தொகையும், 8 பயனாளிகளுக்கு ரூ.9,600 மதிப்பீட்டில் ஓய்வூதிய உதவித் தொகையும் என மொத்தம் 64 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சத்து 98,610 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தொடா்ந்து, பள்ளிக்கல்வித் துறையின் சாா்பில் பழங்கரை எஸ்.கே.எல். மெட்ரிக். பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, குமாா் நகா் நகரவை அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கேரிபாளையம் கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, அவிநாசி செயின்ட் தாமஸ் மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் மாதிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் செயின்ட் அலோசியஸ் மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஐயங்காளிபாளையம் வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 784 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இவ்விழாவில், மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரிஷ் , மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், துணைக் காவல் ஆணையா்கள் தீபா சத்தியன், பிரவீன்

கௌதம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சங்கமித்திரை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், முத்தம்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. முத்தம்பாளையம் ஊராட்சியில் குருக்ககாடு கிராமம் பொது மைதான வளாகத்தில் சுதந்திர தின விழாவை... மேலும் பார்க்க

சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, சேவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி புளியம்பட்டி சாலை, கோபி சாலை வழியாக மீண்டும் சேவூா்... மேலும் பார்க்க

கரடிவாவி அரசுப் பள்ளியில் சுதந்திர தின விழா

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி எஸ்.எல்.என்.எம். அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். மு... மேலும் பார்க்க

கருவலூா் மாரியம்மன் கோயிலில் சண்டியாகம்

அவிநாசி அருகே கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தையொட்டி நடைபெற்ற மகா சண்டியாகம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயிலில் மகா சண்டியாகம் கண... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில் அருகே மரங்கள் வெட்டியதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் தமிழ்நாடு கதா் கிராம தொழில் வாரியத்துக்குச் சொந்தமாக நான்கு ஏக்கா் நிலம் உள்ளது. இதில் கடந்த ஐந்து ஆ... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாக, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். இது குறித்து திருப்பூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: அதிமுக பொதுச்செ... மேலும் பார்க்க