திருமானூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருமானூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் நண்பகல் 12 மணி வரை வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
12 மணிக்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாகி மக்களை வாட்டி வதைத்தது. பிற்பகல் 3.45 மணியளவில் பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்கியது. தொடா்ந்து, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமாா் 1 மணி நேரம் நீடித்தது. இதே போல் தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.