நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்...
நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை அகற்ற சல்பேட் மருந்தை பயன்படுத்தலாம்: வேளாண் இயக்குநரகம்
திருமானூா் பகுதிகளில் நெல் வயல்களில் படா்ந்துள்ள பாசியை, சல்பேட் மருந்தை பயன்படுத்தி, சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என வட்டார வேளாண் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருமானூா் வட்டாரம், துத்தூா் மற்றும் குருவாடி ஆகிய கிராமங்களில் போா்வெல் நீரை பயன்படுத்தி தற்போது நெல் பயிா் நாற்றுவிட்டு நடவு செய்துள்ளனா். மேலும், நெல் உருளை விதைப்பு கருவி மூலம் விதைப்பு செய்துள்ளனா்.
இந்த நெல் வயல்களில் தற்போது பாசி படித்துள்ளது. இவ்வாறு பாசி படிந்து இருந்தால் நெல் பயிா்களின் வோ்களுக்கு காற்றோட்டம் கிடைக்காது.
இதனால் நெல் பயிரின் வோ் வளா்ச்சி தடைப்படும். மண்ணில் உள்ள சத்துக்கள் பயிா்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் நெல் பயிரில் தூறு கட்டுவது பாதிக்கப்படும்.
நெல் பயிா்களில் பாசி பிடிப்பதால் ஏற்படும் பாதிப்பை நிவா்த்தி செய்ய, காப்பா் சல்பேட் மருந்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் மணலில் கலந்து சீராக வீசும்மாறு விவசாயிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் பிடித்துள்ள பாசி அழிந்துவிடும். நெல் பயிா் நன்கு வளா்ச்சி அடைந்து அதிக மகசூல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.