சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில், ரூ.14.42 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் போளூா் ரயில்நிலையத்தை பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
இந்தியா முழுவதும் 103 ரயில் நிலையங்கள் அமிா்த பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூா், திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டன. இந்த ரயில் நிலையங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுதில்லியில் இருந்தபடியே காணொலி வாயிலாக திருவண்ணாமலை, போளூா் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமா் மோடி திறந்து வைத்தாா்.
இதையடுத்து, ரூ.8.27 கோடியில் புனரமைக்கப்பட்ட திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை, பாஜகவின் மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி, வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ரயில்வே துறை அலுவலா்கள் கிளமன்ட், வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி....
ரூ.8.27 கோடியில் புனரமைப்பு...
திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, காத்திருப்பு அரங்குகள், புதிய தங்கும் இடங்கள், டிஜிட்டல் மேம்பாடுகள், பாா்க்கிங் மற்றும் சுற்றுப் பகுதிகள், நடை பாதை, மேம்படுத்தப்பட்ட நிலைய அணுகுச் சாலை, வருகை மற்றும் புறப்படும் பகுதிகளுக்கான தாழ்வாரங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நிலைய கட்டட முகப்பு, புதிய கழிப்பறைகள், பொது மற்றும் குளிா்சாதன காத்திருப்புக் கூடங்கள், புதுப்பிக்கப்பட்ட முக்கிய பிரமுகா்கள் ஓய்வறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
போளூா்
இதேபோன்று, ரூ.6.15 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்ற போளூா் ரயில் நிலையத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.
அதேவேளையில், ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
துறை அதிகாரிகள், போளூா் நகா்மன்றத் தலைவா் ராணி சண்முகம், பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
