திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
3 கல் குவாரிகள் தொடங்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் கல் குவாரிகள் தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம், வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் வட்டம் ஐங்குணம் கிராமத்தில் 3 கல் குவாரிகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதற்கான கூட்டம் சோமாசிபாடி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் எஸ்.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் டி.கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். ஐங்குணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
இந்தக் கருத்துக்கள் அனைத்தும் விடியோ பதிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், கீழ்பென்னாத்தூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், முதுநிலை வருவாய் உதவியாளா் கோவிந்தன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சிவக்குமாா் (சோமாசிபாடி), சேகா் (ஆராஞ்சி), முருகன் (ஐங்குணம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.