பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
மாணவா்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி
புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கல்லூரி கனவுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராம்பிரதீபன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி குறித்து விளக்கமளித்தாா். மேலும் அவா்களுக்கு கல்லூரி கனவு புத்தகத்தை வழங்கினாா்.
போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், உதவி திட்ட அலுவலா் சத்யா மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் கலந்து கொண்டனா்.