சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!
பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம்
வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் அன்னக்கூட உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வேத திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, வடித்த அன்னம், இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் உள்ளிட்டவற்றை உற்சவா் சுவாமி முன் வைத்து படைத்தனா். அப்போது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னா் படைக்கப்பட்ட அன்னம் பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.