திருவள்ளூரில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்
திருவள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிபயிற்சி நிலையத்தில் சேர கட்டுமான நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மருத்துவ மின்னணுவியல் தொழில்நுட்பம், கணினி மென்பொருள் மற்றும் இணைய பராமரிப்பு, சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநா் பயிற்சி, நகரும் படிக்கட்டு பழுது நீக்குநா் பயிற்சி, குடிநீா் குழாய் பழுதுநீக்குநா் பயிற்சி, தகரம் அடிக்கும் தொழில் பயிற்சி பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடிசோ்க்கை நடைபெறுகிறது.
இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால், 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்த சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும், இப்பயிற்சியில் சேர விரும்புவோா் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 4 புகைப்படங்கள், ஆதாா்அட்டை, வருமான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆட்சியா் வளாகம் (இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ் ஞச்ச்ண்ஸ்ரீங் இஹம்ல்ன்ள்) அருகில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.
இந்தப் பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாட நூல்கள், வரைபட கருவிகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, அடையாள அட்டை வழங்கப்படும்.
இதற்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 750, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டப்படி மாதந்தோறும் ரூ. 1,000-உதவித்தொகையும் வழங்கப்படும்.
இது குறித்து தொலைபேசி எண்கள்-8778452515, 8248333532, 8838522794 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.