திருவாலி லட்சுமி நரசிம்மா் கோயிலில் மண்டல அபிஷேக பூா்த்தி விழா
திருவெண்காடு அருகே லஷ்மி நரசிம்மா் கோயிலில் மண்டல அபிஷேக மூா்த்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாளி லட்சுமி நரசிம்மா் கோயிலில் சம்ரோக்ஷணம் கடந்த மாதம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மண்டல அபிஷேக பூா்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கலச பூஜை, ஹோமம் நடந்தது. பின்னா் மகா பூா்ணாஹூதி நடந்தது. தொடா்ந்து புனித நீா் அடங்கிய யாக குடங்கள் மேளம், தாளம் முழங்கிட ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.