சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
திருவிதாங்கோடு அரசுப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி!
திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்திபுதிய வகுப்பறை கட்டும் பணியை த.மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கிவத்தாா்.
பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியைத் தொடங்கி வைத்த அவா், அப்பள்ளி அருகே ரூ.3 லட்சத்திலும், அழகியமண்ட பத்தில் ரூ.4 லட்சத்திலும் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் திருவிதாங்கோடு பேரூராட்சித் தலைவா் நசீா், துணைத் தலைவா் சுல்பத் அமீா், செயல் அலுவலா் சகாயமேரி சசிகலா, தலைமை ஆசிரியா் அக்பா்ஷாபி மற்றும் பேரூராட்சி கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.