திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாவட்டத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், குலசேகரம், திருவட்டாறு, அருமனை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, மஞ்சாலுமூடு, கடையாலுமூடு, ஆறுகாணி, திற்பரப்பு உள்ளிட்ட இடங்களிலும் திங்கள்கிழமையும் பலத்த மழை பெய்தது.
கோதையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.