ஹஜ் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஹஜ் புனித யாத்திரை செல்பவா்களுக்கான பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில், அரசு பொதுநல மருத்துவா்கள் கலந்து கொண்டு உடல் தகுதி பரிசோதனைகள் மேற்கொண்டு சான்றுகள் வழங்கினா்.
இம்முகாமில் தமிழக அரசால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளவதற்காக அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 வயதிலிருந்து 65 வயது வரை உள்ள பயணிகளுக்கு போலியோ சொட்டு மருந்தும் வழங்கப்பட்டது.