பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
தில்லியில் 118 நாள்கள் திருப்தி பிரிவில் காற்றின் தரம்: அமைச்சா் சிா்சா
தில்லியில் நிலவும் காற்று மாசு பிரச்னையைக் கட்டுப்படுத்த பாஜக தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சிகளால், நிகழாண்டில் இதுவரை 118 நாள்கள் காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்ததாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்துள்ளாா்.
தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது தொடா்பாக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியதாவது: நிகழாண்டில் இதுவரை 118 நாள்களுக்கு காற்றின் தரம் திருப்தி அல்லது நடுத்தர பிரிவில் இருந்தது. இது காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசு மேற்கொண்ட நீண்ட கால நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும்.
2016-இல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தபோது, 110 நாள்கள் மக்கள் மட்டுமே காற்றின் தரம் தூய்மையாக இருந்தது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில் 118 நாள்கள் காற்றின் தரம் தூய்மையாக இருந்திருக்கிறது. ஆம் ஆத்மி அரசு சாக்கு போக்குகளைக் கூறி வந்தது. நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றுகிறோம்.
மேகவிதைப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. செப்டம்பரில் அவை நடத்தப்படும். தேவை ஏற்படும் நிலையில், நவம்பா்-டிசம்பரில் காற்று மாசு அதிகரித்து காணப்படும்போது செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.