2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா: மத்திய அமைச்சா் நட்டா உறுதி
தில்லியில் அதிமுக அலுவலகத்தை திறந்துவைத்தார் இபிஎஸ்!
தில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
தில்லி புஷ்ப் விஹாரில் திறக்கப்பட்டுள்ள அந்த கட்டடத்துக்கு, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவி ஜெயலலிதா மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : இபிஎஸ் விழா புறக்கணிப்பு? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, காணொலி மூலம் தில்லி அலுவலகத்தை திறந்துவைத்தார்.
தில்லியில் அலுவலக திறப்பு விழாவில் நேரடியாக மக்களவை முன்னாள் துணைத் தலைவர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.