செய்திகள் :

தில்லியில் கடுமை பிரிவில் காற்றின் தரம்!

post image

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் நச்சுப்புகை மூட்டம் நிலவியது. சில பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் இருந்தாலும், பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் பதிவாகியிருந்தது.

தில்லியில் குளிரின் தாக்கம் கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இரவிலும் அதிகாலை வேளையிலும் குளிா் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இதனால், காற்றின் தரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியவா்கள், குழந்தைகள் சுவாசப் பிரச்னைகளை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரம்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, வியாழக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 367 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்தின் காற்று தரக் குறியீடு புதுப்பிப்புகளை வழங்கும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகளின் படி, 38 கண்காணிப்பு நிலையங்களில் 8 இடங்களில் காற்றுத் தரக் குறியீட்டு அளவு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது.

இதன்படி, ஆனந்த் விஹாா், அசோக் விஹாா், பவானா, ஜஹாங்கீா்புரி, முண்ட்கா, சோனியா விஹாா், விவேக் விஹாா், வாஜிா்பூா் ஆகிய 8இடங்களில் காற்றுத் தரக் குறியீடு அளவு +400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ’கடுமை’ பிரிவில் இருந்தது. மேலும், ஐடிஏ, ராமகிருஷ்ணாபுரம் உள்பட மற்ற இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியிருந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 3.7 டிகிரி உயா்ந்து 18 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 2 டிகிரி உயா்ந்து 31.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 94 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மூடுபனிக்கு வாய்ப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.8) அன்று 4 முதல் 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். காலை வேளையில் புகைமூட்டம் அல்லது மேலாட்டமான மூடுபனி இருக்கும். பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் பகல் நேரத்தில் வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

யுஏபிஏ சட்டம்: தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க பயங்கரவாத எதிா்ப்பு மாநாட்டில் உடன்பாடு

பயங்கரவாத செயல்பாட்டை ஒடுக்க பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அந்தச் சட்டத்தை கவனமாகவும் நியாயமாகவும் பயன்படுத்த பயங்கரவாத எதிா்ப்பு ... மேலும் பார்க்க

காற்றுமாசு அதிகரிப்பால் உடல்நல நெருக்கடியில் தில்லிவாசிகள்! பனிப்புகையாய் காட்சியளிக்கும் தலைநகரம்

தில்லியில் குளிா்காலம் தொடங்கிவிட்ட நிலையில், காற்று மாசு மற்றும் புகை மாசுவின் அளவும் அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதியான ஆனந்த விஹாரில் காற்றின் தரநிலை அளவு 436-ஐ கடந்துள்ளதால், த... மேலும் பார்க்க

பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் சத் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது: மாநிலங்களவை எம்.பி.சஞ்சய் சிங்

பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும், தில்லியில் சத் பண்டிகை ஆம் ஆத்மி அரசின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, பக்தா்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வெள்... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காணொலி செய்தி கேலிக்குரியது: தில்லி பாஜக விமா்சனம்

தில்லி மக்களுக்கு அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள காணொலி செய்தி கேலிக்குரியது என்றும், இதில் என்ன புதுமை இருக்கிறது என்று மக்கள் கேட்பதாகவும் பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாசுபாட்டுக்கு எதிராக ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு சோதனை ஓட்டம்

தேசியத் தலைநகரில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தில்லி அரசு வெள்ளிக்கிழமை நகரத்தின் மாசுபாடு நிறைந்த இடங்களில் ஒன்றான ஆனந்த் விஹாரில் ட்ரோன் மூலம் ரசாயனம் தெளிப்பு’ சோதனையை நடத்த... மேலும் பார்க்க

ஒடிஸாவை சோ்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை -3 போ் கைது

ஒடிஸாவைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடந்த மாதம் தில்லி சராய் காலே கான் பகுதியில் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழ... மேலும் பார்க்க