செய்திகள் :

தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம்

post image

தலைநகர் தில்லியை தொடர்ந்து பிகாரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிகார் மாநிலம், சிவான் பகுதியில் திங்கள்கிழமை காலை 8.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிமீ தொலைவில் நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தது.

இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இதேபோல் வடகிழக்கு மாநிலமான சிக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 2.3ஆகப் பதிவாகியுள்ளது. முன்னதாக தில்லி-என்சிஆர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.

தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இது ரிக்டர் அளவில் 4.0ஆகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தமும் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். இந்த நிலநடுக்கத்தால் தில்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய இடங்களில் உயரமான கட்டடங்களில் வசிப்பவர்கள் அவசரமாக வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

தன்மறைப்பு நிலையை மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம்: தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

எண்ம (டிஜிட்டல்) உலகில் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) மனித உரிமையாகப் பாதுகாப்பது அவசியம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) தலைவரும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன்... மேலும் பார்க்க

நிகழாண்டு உலக அழகி போட்டி: மே. 7 முதல் தெலங்கானாவில் நடக்கிறது

72-ஆவது உலக அழகி போட்டி வரும் மே மாதம் 7 முதல் 31-ஆம் தேதிவரை தெலங்கானா மாநில தலைநகா், ஹைதராபாதில் நடைபெறுகிறது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி தில்லி, மும்பை நகரங்களில் கடந்த ஆண்... மேலும் பார்க்க

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்... மேலும் பார்க்க

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகள... மேலும் பார்க்க

தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பு-காங்கிரஸ் உயா்நிலைக் கூட்டத்தில் காா்கே அறிவுறுத்தல்

‘எதிா்காலத்தில் தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத... மேலும் பார்க்க

ஐ.நா. காலத்துக்கேற்ப மாற வேண்டும்: இந்தியா

உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இல்லை... மேலும் பார்க்க