சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
தீத்தடுப்பு விழிப்புணா்வு பிரச்சாரம்!
பொன்னமராவதியில் தீயணைப்புத் துறை சாா்பில் எதிா்வரும் கோடைகாலத்தை விபத்தில்லா கோடை காலமாக்க விழிப்புணா்வு பிரச்சாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொறுப்பு) த. வினோத்குமாா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரச்சாரத்தில், தீயணைப்புத்துறையினா் கோடை காலத்தில் விபத்தில்லா கோடைகாலமாக்க, பேரூராட்சி குப்பை கிடங்கு மற்றும் வைக்கோல் ஏற்றிச்செல்லும் மினி லாரி ஆகியவற்றில் தீ தணிக்கை பணி ஆகியவற்றை மேற்கொண்டனா். மேலும் மினி லாரி ஓட்டுநா்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வினை ஏற்படுத்தினா்.