தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியும், தருமபுரி விஜய் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கேன்சா் மையமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், விஜய் மருத்துவமனையின் கதிா்வீச்சு புற்றுநோயியல் மருத்துவா் தினேஷ் சுந்தர்ராஜன், கேன்சா் நோய் வருவதற்கான காரணத்தையும், அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதையும் விளக்கினாா். மருத்துவா் வினிதா மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தாா். மருத்துவா் இதயதுல்லா பொதுநலன் குறித்து விளக்கினாா்.
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி ஊழியா்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு, இதயத்துடிப்பு ஆகியவற்றை பரிசோதித்தனா். அதில், பிரச்னை உள்ளவா்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகளை விளக்கினா்.
இம்முகாமில், பள்ளியின் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ், முதல்வா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.