GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
போச்சம்பள்ளி சிப்காட்டில் சோதனைச் சாவடி திறப்பு
போச்சம்பள்ளி சிப்காட்டில் காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சிப்காட் தொழில் பூங்கா 1,379.76 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. இதில், தற்போது 45 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழில் பூங்காவில் 15 ஆயிரம் போ் பணியாற்றி வருகின்றனா்.
இவா்களின் நலன் கருதியும், நிறுவனங்களின் பாதுகாப்பு கருதியும், புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, காவல் சோதனைச் சாவடி திறக்கப்பட்டுள்ளது.
இந்த காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி ஆட்சியா் திறந்துவைத்து, அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை பாா்வையிட்டாா்.
நிகழ்வுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை முன்னிலை வகித்தாா். பா்கூா் காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், வட்டாட்சியா் சத்யா, சிப்காட் திட்ட அலுவலா் சிந்து, காவல் ஆய்வாளா் நாகலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.