‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’
ஒசூரில் வாசன் கண் மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், கண் குறைபாடு உள்ள மருத்துவப் பயனாளிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவா் சமிதா தெரிவித்தாா்.
வாசன் கண் மருத்துவமனையின் ஒசூா் கிளை சாா்பில் செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், கண் சிகிச்சை சிறப்பு மருத்துவா் சமிதா மற்றும் கண் சிகிச்சை நிபுணா்கள் கூறியதாவது:
இந்த மருத்துவமனை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நீரிழிவு விழித்திரை நோய்க்கு இலவச சிகிச்சை பெறுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
அதன்படி, கண் விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டவா்கள், கண்ணில் கூம்பு வடிவ கருவிழி சரிசெய்தல், குழந்தைகளுக்கான கண்புரை அறுவை சிகிச்சை, கண் நீா் அழுத்த நோய் உள்ளிட்ட கண் தொடா்பான நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம்.
இதற்கு சமா்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களான காப்பீட்டு அட்டை, ஆதாா் அட்டை, ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு குறைவாக இருத்தல் தொடா்பான கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட வருமானச் சான்று மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றை அளித்து மதுரை, ஈரோடு, சேலம், ஒசூா் மற்றும் சென்னை கிளைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றனா்.