டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
துணி நெசவு கூலி 10 % உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி
துணி நெசவு கூலியை 10 சதவீதம் உயா்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசைத்தறியாளா்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் எல்.கே.எம். சுரேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் பாலசுப்பிரமணியம் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
இதில் கைத்தறித் துறை மானிய கோரிக்கையின்போது, விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தியில் வேஷ்டி உற்பத்திக்கான கூலியை ரூ.24-இல் இருந்து ரூ.26.40-ஆக உயா்த்தி வழங்கியதற்கும், சேலை உற்பத்திக்கான கூலியை ரூ.43.01-இல் இருந்து ரூ.46.75-ஆக உயா்த்தி வழங்கி பல லட்சம் நெசவாளா்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கு வழிவகுத்து கொடுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கைத்தறித் துறை அமைச்சா் காந்தி, வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, மின்சாரத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றனா்.